Tuesday, June 28, 2016

எறும்பின் சாபம்

              க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல்,                     தமிழ்த்துறை                     தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர்                     பாரதியார் பல்கலைக்கழகம்                     கோயம்புத்தூர் - 46









ஆசிரியர் :     எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது  கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர்.

ஆசிரியர் :    எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது.  ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு இருந்தது.

ஈ :            என்னடா! ஏறு ஓட்டபோனவ இன்னும் காணம். சரி! வரட்டும். பாயாசத்தை அடுப்புல வெச்சேன் என்னாச்சினு தெரியல பாப்போம். வெந்து இருக்கமா?

ஆசிரியர் :    ஏறு ஓட்டிவிட்டு வீட்டிற்கு வந்தது எறும்பு.

எறும்பு :      எங்கடா அவன காணம், எங்க போயிருப்பான், வீட்டுக்குப் பின்னாடியும் இல்ல, அடுப்புல வேற என்னமோ வச்சிட்டு போயிருக்கான், எங்க போனாலும் சொல்லாம போகமாட்டானே. சரி! வரட்டும் உக்காரலாம்.

ஆசிரியர் :    அந்த வழியில் வந்த கொசு   
  
கொசு :       எறும்பண்ணா அடுப்புல எதோ தீயுர வாசன அடிக்குதுப் பாருங்க.

ஆசிரியர் :    எறும்பு அடுப்பைப் பார்க்க செல்கிறது.

எறும்பு :       மாப்பிள என்ன விட்டுட்டு போயிட்டயேடா எனக்கு வேற யாருடா இருக்காங்க உன்னவிட்டா,

ஆசிரியர் :    சினேகிதன், இறந்தது நினைத்து அழுது கொண்டு இருக்கிறது. அந்த வழியாக வந்த காகம் எறும்பை பார்த்து பேசுகிறது.

காகம் :       எறும்பண்ணா, எறும்பண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, அழுதுட்டு இருக்க.

எறும்பு :      என் சினேகிதன் இறந்து நான் அழுக, காக்கா உன் ஒரு கண்ணு குருடாக.

ஆசிரியர் :    காக்கா கண்ணு குருடாகிவிட்டது. எப்பையும் போல அது வசிக்கும்  பெரிய ஆலமரத்துல போய் உட்காந்துரிச்சி.

ஆலமரம் :    காக்கா அண்ணா, காக்கா அண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, ஒரு கண்ணு குருடாயி வந்துருக்க.

காகம் :       ஈ செத்து எறும்பழ, என் கண்ணு குருடாக, உன் மரம் அடியோட சாய.

ஆசிரியர் :    ஆலமரமும் சாய்ந்து விட்டது. அங்கு வசிக்கும் யானை இரவு எல்லாம் சுற்றி திரிந்து விட்டு ஓய்வுக்காக இந்த மரத்தடியில் தூங்குவது உண்டு. யானை ஆலமரத்தைப் பார்த்துப் பேசுகிறது.

யானை :      ஆலமரமண்ணா, ஆலமரமண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்க என்னாச்சி, உனக்கு இப்படி அடியோட சாஞ்சிகிடக்குற.

ஆலமரம் :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, நான்  அடியோட சாய, உன் தந்தம் உடைய.

ஆசிரியர் :    யானையுடைய தந்தமும் உடைந்துவிட்டது. தினமும் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு போகும் அந்த யானையைப் பார்த்துப் பேசியது ஆறு.

ஆறு :         ஆனையண்ணா, ஆனையண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, யாருகூட சண்ட போட்ட தந்த உடஞ்சி வந்துருக்க.

யானை :      ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம் அடியோட சாய, என் தந்தம் உடைய, உன் ஆற்று நீர் எல்லாம் வற்றிபோக.

ஆசிரியர் :    ஆற்று நீர் எல்லாம் வற்றி போய்விட்டது.  எப்போதும் இங்க தண்ணீரை எடுப்பதற்காக பொண்னி வருவாள். அவள் ஆறைப் பார்த்து பேசுகிறாள்.

பொண்னி :    ஆறண்ணா, ஆறண்ணா, இவ்வளவு நாளா நல்லா தானே இருந்த இன்னிக்கு என்னாச்சி, எல்லாம் தண்ணீயும் நீயே குடிச்சுட்ட. அடி பாவி.

ஆறு :          ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய என் ஆற்று நீர் வற்றி போக உன் இடை மணையாக.

ஆசிரியர் :    பொன்னியின் இடை மணையாகிவிட்டது. பொன்னியைப் பார்த்து ராணி பேசுகிறாள். அடி என்னாடி பொன்னி, இவ்வளவு நாளா நல்லாதானே இருந்த இன்னக்கி ஏன் இப்படி உட்கார்ந்துகிட்ட இருக்க. பொன்னியை பார்த்து பேசுகிறாள் ராணி.


பொன்னி :    ஈ செத்து எறும்பழ, காக்கா கண்ணு குருடாக, ஆலமரம்  அடியோட சாய, யானை தந்தம் உடைய, ஆற்று நீர் வற்றி போக என் இடை மணையாக, உன் வாய் ஊமையாக.

ஆசிரியர் :    ராணி ஊமையாகிவிட்டாள்.



இப்படி அக்காலக்கட்டத்டதில் இருந்து இன்று வரையிலும் ஓரறிவு உயிரில் இருந்து ஐந்தறிவு உயிர் வரைக்கும்மே சாபமிட்டால் பழிக்கும் என்பதே ஐதீகம். இனி வரும் காலங்களில் கணினி உலகமாக மாறினாலும், இக்கணினியை பயன்படுத்தும் போது தேவையில்லாத ஒன்றை பயன்படுத்தினால் வைரஸ் என்ற ஒன்று சாபமிட்டு அச்செயலை இழக்கச்செய்கிறது.
இப்படிக்கு சாபம்
    


Tuesday, June 21, 2016

போயரின மக்களின் நாட்டுப்புற விளையாட்டுக் கலைகள்

க.பிரகாஷ், எம்.ஏ எம்.பிஃல், தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கழைக்கழகம், கோயம்புத்தூர் – 46
தருமபுரி மாவட்டத்திற்கு  உட்பட்ட அரூர் வட்டத்தைச் சேர்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்குமொழி பேசும் போயர் இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், பிற இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், வேறுப்பட்டுக் காணப்படுகிறது. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் ஒரு சிலர் வெளியூருக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம் கட்டுதல், கல் கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் விழாகாலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருவதுண்டு. இங்கு படிக்கும் சில குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமே உள்ளுரில் இருக்கின்றனர்.  மற்றவர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால், தைப் பொங்கல், புரட்டாசி தேர் திருவிழா,  ஊர் திருவிழா, தீபாவளி, ஆடிப் பண்டிகை, போன்ற விழாகாலங்களில் ஊருக்கு  வருகின்றார்கள். அவ்வாறு விழாகாலங்களில் வரும் குழந்தைகள் ஒரு சில  விளையாட்டுகளைத்  தொடர்ந்து விளையாடுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு  ஏற்றவாறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மழை காலம், வெயில்காலம், போன்ற காலங்களில் விளையாட்டை ஆடுவதுண்டு. அவ்விளையாட்டுகள், குரங்காட்டம், மரம் மரம், அஞ்சாங்கள், அச்சுக்கல், கோலி, செம்பா, இது போன்ற விளையாட்டுக்கள் ஆடி வருகின்றனர். இவ்வகை விளையாட்டில் ஒரு சில விளையாட்டு வகைகளை காண்போம்.
 குரங்கு ஆட்டம்
குரங்காட்டம் என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு தாவுவது  குரங்காட்டம் என்கின்றனர். இவ்வாட்டத்தை தொடங்குவதற்கு முன்பு எத்தனை நபர்கள் ஆட இருக்கின்றார்களோ அத்தனைப் பேரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபூத்ரி) போட்டு அவுட்டாகும் ஒரு நபரை தேர்ந்தெடுப்பது உண்டு. இதில் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் ஒப்புக்கைச் சப்பா போடும்போது இருவர் உடைய கரங்கள் கருப்பாகவும், ஒருவருடைய கைகள் வெள்ளையாக இருந்தால், வெள்ளையாக இருக்கும் ஒரு நபர் தகுதியானவர் என்று குறிப்பிடுகின்றனர். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் விளையாட இருக்கும் மரங்களில் ஏறிவிடுவார்கள். தோற்றவராக இருக்கும் ஒரு நபர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்கவைத்து அவர்கள் விளையாடும் மரங்களின் அருகில் ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தில் இருந்து இரண்டடி நீளம் கொண்ட குச்சியினை வீசுவார். பிறகு வீசிய குச்சியினை பிடித்துவிட்டால், வீசும் இந்த நபர் அவுட்டாகிவிடுவார். அவுட்டான அந்த நபர் வீசிய குச்சியினை எடுத்து கொண்டு வந்து அந்த வட்டத்தில் வைத்துவிட்டு மரத்தில் இருக்கும் நபர்களை தொட வேண்டும். அப்படி தொட வரும்போது மரத்தில் இருக்கும் நபர்கள் அருகில் இருக்கும் மரங்களுக்கு தாவுவதுண்டு. ஒரு சிலர் கீழே இறங்கி அந்தக் குச்சியினை தொடுகின்றனர். தொட்டவுடன் மீண்டும் அந்தக் குச்சியினை வீசிவிட்டு மரம் ஏறிவீடுவார். இப்படி இவ்விளையாட்டு தொடர்ந்து கொண்டே வரும்.

மரம் மரம் ஆட்டம்
மரம் மரம் விளையாட்டு என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்தைப் பிடிப்பது மரம் மரம் விளையாட்டு என்கின்றனர். இவ்விளையாட்டை இருபாலர் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். விளையாட இருக்கும் நபர்கள் அனைவரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபுத்ரி) போட்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தேர்ந்தெடுக்காத நபர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றார். பிறகு அவர்களுக்குப் பிடித்த ஒரு மரத்தில் முதலில் விளையாட தொடங்குவார்கள். மரத்தை பிடித்துள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வினாவை எழுப்புவது உண்டு.
            “மரம் மரம் எந்த மரம்”
             மரம் மரம் அசோக மரம்” – என்று குறிப்பிடுவதுண்டு.
அங்கு விளையாட இருக்கும் இடத்தில் எத்தனை மரங்கள் இருக்கின்றனவோ அத்தனை மரங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுவது உண்டு. அப்படி சுட்டிக்காட்டும் மரங்களை ஓடிச் சென்று பிடிக்கவேண்டும். அப்படி பிடிக்க ஓடும் போது தொட்டுவிட்டால் அவுட்டாகி விடுகின்றனர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.
கோலி ஆட்டம்


கோலி விளையாட்டுக்களில் சில வகைகள் உண்டு. அவை!
பேந்தா
அஞ்சல் அறுவல்
கொத்தாட்டம்
என்பது போன்ற வகைகளும் உண்டு.

பேந்தா
இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் விளையாட இருக்கும் நபர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, செவ்வக வடிவில் ஒரு பேந்தாவை வரைந்து அதை இரண்டாகப் பிரித்து, அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்த பிறகு, அனைவரும் அக்கோட்டில் நின்று பேந்தாவை நோக்கி கோலியை உருட்டவேண்டும். பிறகு அந்த கோலிகள் யாருடைய கோலி பேந்தாவுக்குப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்த அணியினர் விளையாட தொடங்குகின்றனர். எதிரணியினர் பேந்தாவில் கோலிகளை வைக்க வேண்டும். பின்னர் பேந்தாவில் உள்ள கோலிகளை நோக்கி கோலிகளை உருட்டிவிடுவார்கள். உருட்டிய கோலிகள் பேந்தாவில் உள்ள ஏதாவதொரு  கோலியை அடித்துவிட்டால் அது முதல் ஆள் அடி என்றும், இரண்டாவதாக உருட்டும் நபருடைய கோலி அடித்துவிட்டால் இரண்டாவது ஆள் அடி என்றும் குறிப்பிடுவது உண்டு. முதல் ஆள் அடிக்கும் கோலியின் நபர் மட்டுமே முதலில் அடிக்க வேண்டும். இரண்டாவதாக ஆள் அடித்த கோலியின் நபர் இரண்டாவதாகவே அடிக்க வேண்டும். இப்படி அடிப்பதற்கு பதிலாக மாற்றி அடித்துவிட்டால்  அந்த அணி அவுட்டாகிவிடும். இப்படி அடித்த கோலிகளையும், மற்ற கோலிகளையும் அந்த நபர்களுக்குப் பிரித்துவிடுவது உண்டு. பிரித்து விட்ட கோலியின் நபர்களே அந்த கோலியினை அடிக்க வேண்டும். இப்படி அடித்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்துள்ளனர். அக்கோட்டில் கோலிகளை நிற்காமல் அடிக்க வேண்டும். அப்படி அடித்துவிட்டால் அவுட்டாகிவிடுகின்றனர். நிற்காமல் அக்கோட்டை தாண்டி அடித்து அவுட்டாகும் வரை ஆடி கொண்டே இருப்பார். இப்படி ஆடும் பொழுது அந்த அணியில் யாருமே அடிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். பிறகு எதிராக ஆடிய அணியினர் அக்கோலிகளை தனது மணிக்கட்டியாலும், முழங்கையாலும் பேந்தாவை நோக்கி தள்ள (தோக்க) வேண்டும்.  இப்படி தள்ளும் போது வெற்றி பெற்ற அணியினர் பேந்தாவில் இருந்து அக்கோலிகளை மீண்டும் அடிப்பார். அடிக்கும்போது தடுத்துவிட்டால், தடுத்தா எட்டடி எண்ணிப்பார்த்தா பதினாறு அடி என்று சொல்லி அடிப்பது உண்டு. இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.

அஞ்சல் அறுவல்
அஞ்சல் அறுவல் என்பது கோலி ஆட்டத்தில் ஒரு வகை விளையாட்டு. இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். இவ்விளையாட்டிற்கு முதலில் ஒரு கோலி அளவிற்குக் குழியைப் பறித்து அக்குழியில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கோடு வரைந்து அந்தக் குழியை நோக்கி உருட்ட வேண்டும். அப்படி உருட்டும் கோலி குழியில் விழுந்துட்டால் தொண்ணூறு (தொம்பன்) என்றும் மற்றவர் கோலிகள் குழியில் விழுகாமல் இருந்தால் குழியை நோக்கி உருட்டவேண்டும். அப்படி உருட்டினால் ஐம்பது (அஞ்சல்) என்று குறிப்பிடுகின்றனர். இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

                       தெலுங்கு       –           தமிழ்
                        அஞ்சல்           –           50
                        அறுவல்           –           60
                        எழுவல்            –           70
                        எட்டன்            –           80
                        தொம்பன்        –           90
                                                                                                       தெசிங்             –           100
இப்படி ஒவ்வொருவரும் கோலியை உருட்டிய பிறகு குழிக்கு அருகில் இருக்கும் நபரே முதலில் அடிக்க வேண்டும். ஒருவருடைய கோலியை இன்னொருவர் அடித்தால் பத்து என்ற கணக்கில் அடிக்க வேண்டும். குழியில் உருட்டி விட்டு அடித்தால் அஞ்சல் அறுவல் என்று அடிக்க வேண்டும். இப்படி தெசிங்கை வெற்றி பெற்றவர் பழம் ஆகிவிடுவார். இப்படி எல்லோரும் ஆடிய பிறகு தோல்வியடைந்த நபர் அக்குழியில் இருந்து முன்று அடி தன் கால்களால் அளந்து கோலியை வைக்க வேண்டும். வெற்றி பெற்றவர் அனைவரும் கோலியை உருட்டி அக்கோலியினை அடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். யாருமே அடிக்காவிட்டால் தோல்வியடைந்த நபர் கோலியை எடுத்துக் கொண்டு குழியை நோக்கி ஓடி வர வேண்டும்.
 கொத்தாட்டம்
இதுவும் கோலி விளையாட்டின் ஒரு வகை விளையாட்டுதான். இவ்விளையாட்டை எத்தனை பேர்வேண்டுமானாலும் விளையாடலாம். இவ்விளையாட்டை யாராவது ஒருவர் விளையாட தொடங்கலாம். முதலில் மூன்று கோலிகளும், சுவர் வோரத்தில் ஒரு கோடு வரைந்து அதனுள் கோலி அளவிற்கு மூன்று குழிகள் பறிக்க வேண்டும். ஆட இருக்கும் நபர், அல்லது அனைவரும் சேர்ந்து ஓர் குறிப்பிட்ட தொலைவை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட ஆரம்பிப்பார்கள். ஆட இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கோலிகள் மட்டும் உருட்டி விடுவார். பின்னர் கீழே, மேலே (எதரா, மேழு – தெலுங்கு) என்று குறிப்பிட்டப் பிறகு மற்றொரு கோலியால் எதிராக ஆட இருப்பவர் குறிப்பிட்ட கோலியை அடிக்கவேண்டும். அவர் குறிப்பிட்ட கோலியை தவிர மற்ற கோலியை அடித்துவிட்டால் (பச்சா) அவுட்டாகிவிடுவார். அதே போல் அக்குழியில் விழுந்து விட்டால் ஒரு புள்ளி என்றும் அதை அடித்துவிட்டால் இரண்டு புள்ளி என்றும் குறிப்பிடுவதுண்டு.
இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்
            தெலுங்கு       –           தமிழ்
            எதற்                –           கீழே
            மேழு               –           மேலே
            இஷ்டம்           –           விருப்பம்
            பச்சா               –           இரண்டு கோலியும் அடித்தல்
கோட்டிப் புல்
கோட்டிப் புல் ஆட்டம் என்பது நமக்குத் தேவையான அளவிற்கு (அல்லது) ஒன்றரை அடி அளவிற்கு நீண்ட குச்சியினையும், (கோட்டியினை) அறையடி அளவிற்கு சிறு குச்சியினையும் (புல்லினையும்) செய்த பின்னரே ஆடத் தொடங்குவர். இவ்வகை கோட்டிப்புல்லை எந்த வகை மரங்களிலும் செய்துகொள்ளலாம். எத்தனை பேர்வேண்டுமானாலும் ஆடலாம். எத்தனை நபர் இருக்கின்றனர் என்று பார்த்தப் பிறகு சமமாக இரண்டு அணிகளாகப் பிரிக்கின்றனர். இந்த அணியில் முதலில் ஆடத் தொடங்க இருப்பவர் புல் அளவிற்கு குழியைப் பறித்துவிட்டு, அந்தக் குழியின் முன்னாடி வைத்து  தள்ளவேண்டும் (தோக்க). அப்படி தள்ளும் போது எதிரணியினர் பிடித்துவிட்டால் புல்லை தள்ளியவர் தோற்றுவிடுவர். அப்படி பிடிக்கவில்லை என்றால் அந்தப் புல்லினை கொண்டு அக்கோட்டியின் மீது வீச வேண்டும் . அப்படி வீசும் போது அப்புல் கோட்டி மீது விழுந்துவிட்டால் அவுட். விழுகவில்லை என்றால் அப்புல்லை மூன்று முறை அடிக்க வேண்டும். முதல் முறை அடிக்கவில்லை என்றால் அவுட். முதல் முறை அடித்துவிட்டு இரண்டாவது முறை அடிக்கவில்லை என்றால் எதிரணியினர் தலை மீது அப்புல்லினை வைத்து சுத்தி கீழே போட வேண்டும். அதற்குப் பிறகு அடிக்கவேண்டும். அப்படி முதல் முறையாக அடிக்கும் போது அந்தப் புல்லை எத்தனை தடவை அடிக்கின்றாரோ, அதுவே முதலில் ஏத்துக்கப்படும். (கோட்டியால் புல்லை இரண்டு, மூன்று, நான்கு முறை தொட்டு அடித்தல்) இப்படி மூன்று முறை அடித்ததில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அங்கிருந்து  தோராயமாக இருபது, ஐம்பது என்று எண்ணிக்கையில் குறிப்பிடுவது உண்டு..
கோட்டிப் புல்லை மூன்று முறை அடிக்கும் போது அளக்கும் முறை
            மூன்று முறை அடிக்க வேண்டும்
            முதலில் அடித்தால்                  –           கோட்டி
            இரண்டு முறை அடித்தால்      –           புல்
            மூன்று முறை அடித்தால்         –           தீக்குச்சி
            நான்கு முறை அடித்தால்        –           கண் முடி
            ஐந்து முறை அடித்தால்           –           நெல்
            ஆறு முறை அடித்தால்            –           ராகி
            ஏழு முறை அடித்தால்             –           மண்
இப்படி ஒவ்வொரு முறை அடிக்கும் போது, ஒரே முறை தொடர்ச்சியாக அடித்தால் இந்த வகையில் அளக்க வேண்டும். இப்படி இரண்டு அணிகளில்  யார் புள்ளி அதிகமாக எடுக்கின்றனரோ அவர் வெற்றி என்று குறிப்பிடுகின்றனர். வெற்றி பெற்ற அணியினர் விளையாடிய இடத்தில் இருந்து எத்தைனை பேர் ஆடினரோ அத்தனை பேரும் மூன்று முறை கோட்டியால் புல்லை அடித்து விடுவார். தோல்வியுற்றவர் அடிக்கும் போது அப்புல்லை பிடித்துவிட்டால் அல்லது பிடிக்காமல் இருந்தால்  இறுதியாக எந்த இடத்தில் புல் இருக்கிறதோ, அங்கிருந்து அப்புல்லை கையில் எடுத்துக் கொண்டு மூச்சி விடாமல் பாட்டு பாடிக் கொண்டே விளையாடிய இடத்திற்கு வந்து சேரவேண்டும். அப்படி மூச்சி விட்டால் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அப்புல்லை ஒரு அடி அடித்துவிடுவார். அங்கு இருந்து வேரொருவர் எடுத்துக் கொண்டு வருவார், வந்த பிறகு தோல்வியடைந்தவர் மீண்டும் ஆட தொடங்குவார்கள்.
இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்
            தெலுங்கு                   –           தமிழ்
            தோக்கு                       –           தள்ளு
            சினுக்கு                       –           தொடர்ச்சி
            குடுகு                          –           ஓடு
            கொளுசு                      –           அளவு
சாணாங்கோல்
சாணாங்கோல் என்பது நம் உயரத்திற்கு ஒரு குச்சியினை  (கோல்) எடுத்து கல் மீது வைத்து ஆடுவது சாணாங்கோல் என்கின்றனர். இவ்விளையாட்டை எத்தனைப்பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்டு ஆவுட்டான நபரை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட தொடங்குவார்கள். இதில் கடைசியாக யார் விளையாட வருகின்றார்களோ அவர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றனர். பின்னர் விளையாட தொடங்குகின்றனர். விளையாட இருக்கும் அனைவரும் எந்த குச்சியினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  பிறகு இரண்டு கைகளால் அக்குச்சியினைத் தூக்கிவைக்க வேண்டும். தூக்கிவைத்தப் பிறகு யாராவது ஒரு நபர் அக்குச்சியினைத் தனது குச்சியால் தூக்கி எரிந்து விட்டு பின்னர் அவருடைய குச்சியினை  கல் மீது வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார்.  இப்படி அக்குச்சியினை நகர்த்தி கொண்டு இருப்பார். நகர்த்தும் போது கல் மீது வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.
 ஆபியம் மணியாபியம்
ஆபியம் மணியாபியம் என்பது ஆண்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். இவ்விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்ட பிறகு அவுட்டான ஒருவரை குணியவைத்து ஒவ்வொருவரும் அவரை தொடாமல் தாண்டவேண்டும். தாண்டும் போது ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே தாண்டுவதுண்டு. அப்பாட்டு!
            “ஆபியம்
             மணி ஆபியம்
             ரெட்டைக் கொக்கு
                                                                                                                                                       லட்சத்திர மண்ணள்ளி
                                                                                                                                                      ஒத்தக் காலா, இரட்டைக்காலா
                                                                                                                                                        லடி லடி குண்டியில் அடி”
ஆபியம், மணி ஆபியம், இரட்டைக் கொக்கு, இவை மூன்றும் பாடும்போது ஒரே மாதிரியாகவே இருக்கும். லட்சத்திர மண்ணள்ளி என்று சொல்லி தாண்டும்போது மண்ணை அள்ள வேண்டம். அள்ளாவிட்டால் தாண்டியவர் அவுட்டாகிவிடுவார். ஒத்தக் கால் அடி, இரட்டைக் கால் அடி என்று சொல்லி தாண்டும் போது, ஒரு கால் உதைக்கச் சொன்னால் ஒரு காலிலும், இரட்டைக் கால் உதைக்கச் சொன்னால் இரட்டைக் காலிலும் உதைக்க வேண்டும். லடி லடி குண்டியிலடி என்று சொல்லி தாண்டும் போது குணிந்து இருக்கும் அவரது குண்டியில் உதைத்துவிட்டு தாண்ட வேண்டும். அவர் குறிப்பிட்டதை செய்யவில்லை என்றால் அவுட்டாகி விடுகின்றர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.

நொண்டி
நொண்டி விளையாட்டு என்பது ஆண், பெண் இருபாலரும் ஒருகாலை மடக்கிக் கொண்டே ஆடும் ஆட்டத்திற்கு நொண்டி என்கின்றனர். இவ்விளையாட்டை இரண்டு பேர், அல்லது  நான்கு பேர் (இரண்டு அணியாக) பிரித்து ஆடுவதுண்டு. இரண்டு அணியில் ஒரு அணி விளையாடத் தொடங்கும் போது, முதலில் ஒரு கோடு (பட்டை) வரைந்து அதை நான்காகப் பிரித்து விடுகின்றனர். பின்னர் ஆட இருக்கும் ஒருவர் விளையாட வைத்திருக்கும் கல்லை (சில்லியை) எல்லை கோடு தாண்ட வீச வேண்டும். வீசிய பிறகு ஒவ்வொரு பாகத்திலும் கோட்டை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு அந்தக் கல்லை மிதிக்கவேண்டும். அப்படி மிதிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். இக்கல்லை வீசும் போது   ஒவ்வொரு தடவையும் ஒன்று குறிப்பிடுவதுண்டு. அவை!
                தெலுங்கு                   –           தமிழ்
                விசரா                         –           வீசுதல்
                ஒன்னா                       –           ஒன்று
                                                                                ரெண்டா                    –           இரண்டு
                                                                                மூனா                          –           மூன்று
                                                                                நாலா                          –           நான்கு
                                                                               வெள்ளையா             –           உள்ளங்கை
                                                                               கருப்பா                      –           கையின் மேல்புறம்
                                                                              காலா                          –           கால்
                                                                              தலையா                     –           தலை

முதலில் கல்லைக் (சில்லி) கொண்டு பட்டையின் எல்லைக்கு வீசி விட்டு அதை மிதிப்பது வீசுதல் (விசரா) என்கின்றனர்.
ஒன்னா என்பது வீசுதல் முடிந்த பிறகு முதல் பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு ஒன்று (ஒன்னா) என்கின்றனர்.
ரெண்டா என்பது ஒன்னா முடிந்த பிறகு இரண்டாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு இரண்டாம் என்கின்றனர்.
மூனா என்பது ரெண்டா முடிந்த பிறகு மூன்றாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு மூன்றாம் என்கின்றனர்.
நாலா என்பது மூனா முடிந்த பிறகு நான்காவது பட்டையில் கருவியைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு நான்காம் என்கின்றனர்.
வெள்ளையா என்பது நான்கு பட்டைகளில் கல்லைப் (சில்லி) போட்டு மிதித்தப் பிறகு வலது உள்ளங்கையில் கல்லை (சில்லி) வைத்து கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.
கருப்பா என்பது வெள்ளையா போல் வலது கையின் மேல்புறத்தில் அந்த கல்லை (சில்லி) வைத்துக் கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.
காலா என்பது பெருவிரல் இடையில் அந்தக் கல்லை (சில்லி) வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.
தலையா என்பது இவை அனைத்தும் முடிந்தப் பிறகு தலையில் வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்த கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் செய்தால் நான்கு பட்டையில் ஒரு பட்டை பழம் பெறமுடியும். பழம் பெற்ற பிறகு எதிரணியினர் அப்பழத்தை மிதிக்காமல் தாண்டுதல் வேண்டும். இது போல் ஒவ்வொரு முறையும் விளையாடிக் கொண்டு வந்த பிறகு எல்லாப் பட்டையும் பழம் பெறுவது இவ்விளையாட்டின் நோக்கமாகும்.
இப்படி ஒவ்வொரு விளையாட்டும் வித்தியாசமாகவும், வேறுபாடின்றியும், புதுமையாகவும் விளையாடிக் கொண்டு இருந்த இம்மக்கள் தற்போது ஒருசில விளையாட்டுகள் மட்டுமே விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். போயர் இன மக்களின் நாட்டுப்புற விளையாட்டு வகைகள் அதிக அளவிற்கு இருந்தது. இவ்வகை விளையாட்டுகள் விளையாடியதால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க பயனுள்ளதாக இருந்தது. இனி வரும் காலக்கட்டத்திற்கு இவ்வகை விளையாட்டுகள் இருக்கும் என்பதற்கு சாத்திய கூறு இல்லை. இவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் இன்றைய காலகட்டத்தில் விதிகள் மாற்றப்பட்டு வருகிறது. இக்கால கட்டத்தில் விளையாட்டுகளை விளையாடுவதற்கு இயற்கைச் சூழல் இருந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சியின் காரணமாக இவ்வகை விளையாட்டுக் கலைகள் மறைந்து கொண்டு இருக்கின்றது. இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு இவ்விளையாட்டுக் கலைகளை எடுத்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தகவலாளர்
த.கொடியரசன்           – 15
த.சந்தோஷ்                 – 12
க.சின்னதுரை             – 21
க.குமரேசன்                – 23
வே.லோகநாதன்         – 22
க.சதிஷ்                       – 24

Monday, June 20, 2016

வேடனும் ஒரு குயிலும்

  


            ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப நாளா ஆசை.

என்ன ?

தனியாக இருக்க வேண்டும்.

ஏன்?

காட்டில் இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும்.

 சரி!

இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. விலங்குகள் இடம் இருந்து பாதுகாப்பாக இருந்தான்.

முதல் நாள் – வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான் அன்று முழுவதும் சுற்றி திரிந்து எந்த விலங்குகளையும் பார்க்காமல் ஏமாந்தான் வேடன்.

இரண்டாவது நாள் – ஆயூதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் புகுந்தான். புகுந்தவுடனே அவன் கண்ணுக்கு பாம்பு தென்பட்டது. பாம்பைப் பார்த்து வேடன் கூறினான் போகும் போது முதலில் உன்ன தான் பாக்கணுமா, டே முட்டாள் என்ன பாக்குரது இருக்கட்டும், இப்படி ஒவ்வொரு நாள் காட்டுக்குப் போராயே யார பாக்க, தெரியலையே, முதல்ல அத முடிவு செய்யடா,

மூன்றாவது நாள் – தன்னிடம் இருந்த ஆயூதங்களை குறைத்து விட்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.  வெகு தூரம் நடந்து விட்டான், எதையும் பார்க்க முடியலயே என்று வருத்தம் ஒருபக்கம், தண்ணீர் தவிப்பு ஒருபக்கம் என்ன பன்றதுன தெரியாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிட்டான். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில மயங்கிவிட்டான். அந்த மரத்தில் இருந்து ஒரு குரங்கு கிழே இரங்கி அவனை எழுப்பிப் பார்த்தது எந்திரிக்கவேயில்ல, பாவம் என்ன பண்ரதுனே தெரியல, அவன் அருகில் ஒரு காகிதப் பை  இருந்தது, அதை எடுத்து அருகாமையில் ஒரு ஆறு ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த ஆற்று தண்ணீரை காகித பையில் எடுத்துக் கொண்டு வந்து அவன் மேல் தெளித்தது. அவன் மெல்ல மயக்கம் தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்தான். வேடனைக் கண்டு குரங்கு கூறியது, ஏன் இவ்வளவு கஷ்டப்படுற.

நான்காவது நாள் – ஆயூதங்களே இல்லாமல் தண்ணீர் குடவையுடன் மீண்டும் காட்டிற்குச் சென்றான். இன்றாவது வேறு திசை மாறி போவும் என்று நினைத்து திசை தெரியாமல் ஓர் இடத்தில் உட்கார்ந்து விட்டான். இனி என்னால் நடக்க முடியாது கால் வலி அதிகமாயிடுச்சி, பசியொருப்பக்கம் என்ன செய்வது என்று தெரியல பொழுதாயிட்டே இருக்கு, சரி! நடப்போம், கொஞ்ச தூரம் நடந்தவுடன் ஆற்றை பார்த்துவிடுவான். பசியை போக்குவதற்க்கு மீன் பிடித்து சுட்டு சாப்பிட்டு பசியை போக்கினான். பொழுதாயிடுச்சி, மழ வேர வரமாதிரி இருக்கு சரி! போவோம் மழ வந்தா பாக்கலாம், இரவுமாகிவிட்டது. ஒரு பாரை குகையைக் கண்டதும் அங்கே ஒதுங்கிடுவான். மழைவந்ததும் அந்த இடத்தில் வாழும் நரி ஒன்று வந்ததது. வேடனை கண்டதும் பரிதாபப்பட்டது. சரி! இருக்கட்டும் விடு என்று நினைத்துவிட்டு வேடனை பாதுகாக்க வெளியே காத்து கொண்டு இருந்தது. வேடன் ஆச்சரியப்பட்டான். நரி கூறியது திசை தெரியாமல் வந்தால் திசை தெரியாமல் போயிடுவ மகனே!

ஐந்தாவது நாள் – நடு காட்டில் இருந்து மீண்டும் அவனது வேட்டையை தொடர்கிறான். அதிசயமாக ஒரு மானைப்  பார்த்தான், அம்மானை எப்படியாவது கொன்று விடவேண்டும் என்று துடித்தான். பின்னாடி ஒரு மான் இருப்பதைப் பார்த்துவிட்டு அம்மான் மீது வைத்த குறியை தப்பிவிடுகிறான். டே வேடா! அது இரண்டும் உறவாடிகிறது அதை போய் கொல்ல நினைக்கிறயேடா.

சரி! சரி!

ஆறாவது நாள் – அக்காட்டில் இருந்து வேறு காட்டிற்குச் சென்று விட்டான். அக்காட்டில் வழி தெரியாமல் முள் புதரில் மாட்டிக் கொண்டான். அவன் சத்தமிட்டதைக் கண்டு யானை ஓடி வந்தது, பரிதாபத்துடன் வேடனுக்கு யானை உதவியாக இருந்தது. வழி சேர்த்த யானைக் கூறியது முடியாத வேலைய ஏன்டா முயற்சிக்கிற.

ஏழாவது நாள் – வேடன் அவன் வீட்டை நோக்கி பயணம் செய்தான். இந்த ஆறு நாட்கள் விலங்குகளை வேட்டையாடி நான் ஏமாந்து விட்டேன். இன்று ஒருநாளாவது பறவைகளை வேட்டையாடுவோம். என்று மனதில் நினைத்துவிட்டு வேட்டையை தொடர்கிறான்.
ஓர் உயர்ந்த தென்னை மரத்தை கண்டு கிளிகள் ஓடியது, அவனும் ஓடினான் கிளிகள் அம்மரத்தின் பொந்தில் நுழைந்தது சிறிது நேரம் கழித்து சத்தமிட்டது. வேடன் மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டு இருந்தான். கிளி வேடனைப் பார்த்து கூறியது, டே முட்டாள் நீ ஓடி வந்து பிடிப்பதற்கு உன்னை போல் நான் வேடன் அல்ல. வேடிக்கையாளர் டா என்ன வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும் என்று.

மீண்டும் வேடன் ஏமாந்தான். தொடர்ந்து வழியில் கூட்டம் கூட்டமாக புறாக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். இன்று தான் நான் நினைத்த அளவிற்கு வேட்டையாடப்போகிறேன் என்று மகிழ்ச்சியாக புறாக்கள் உட்கார்ந்த இடத்தில் ஒரு வலையை வீசிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ரொம்ப நேரமா ஒரு புறாவ கூட காணம், பொழுதுவேற ஆயிடுச்சு என்ன பன்னரது தெரியல, இதுங்கெல்லாம் எங்கடா போயிருக்கும், சரி! சரி! வருட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்போம். பொழுதுவேற சாஞ்சிறுச்சி ஒரு புறா மட்டும் வருது, அந்த புறாவை பாத்துட்டு எங்க போவுது, அதைப் பாக்கலாம். அந்தப் புறா போயும் ரொம்ப நேரமாச்சி கூடுல அடங்கியிருக்குமா என்று நினைத்து விட்டு சென்று அந்த இடத்தைப் பார்க்கிறான். பெரிய கிணறா இருக்கு எல்லா புறாவும் இங்கதா அடங்கியிருக்கா சரி! சரி! பொழுது சாஞ்சிடுச்சி இங்கே இருக்கலாம். காலையில எழுந்து எல்லா புறாவையும் பிடிச்சிட்டு போயிடலாம். காலையில எழுந்து பார்த்தான் ஒரு புறாகூட இல்ல. வேடனைப் பார்த்து ஒரு புறாக் கூறியது டே!  ஒரு விலங்கவே உன்னால பிடிக்கமுடியல எங்கல எப்படி பிடிக்கமுடியும் உன்னால,

எட்டாவது நாள் – ஒரு வாரம் சுற்றி திரிந்து எதுவும் பிடிக்கவில்லை இன்று எதையாவது பிடிச்சிட்டு போலாம். தொடர்கிறான், மீண்டும் அந்தப் பாம்பைச் சந்திக்கின்றான். அதை பார்த்து மறுபடியும் உன்னையே பார்குரன், இன்னைக்கு பொழப்பு அவ்வளவுதான்.
சரி! சரி! நீ எங்க போரனு பாக்குரன். பெரிய மரத்தில் குயில் கூவுது, காகம் கரைந்து கொண்டு இருந்தது. வேடன் பார்கிறான் குயிலும் கூவுகிறது, காகமும் கரைகிறது என்னவா இருக்கும் சரி இருக்கட்டும். இந்தப் பாம்பைப் பார்ப்போம், அட அதுக்குள்ள எங்கடா போச்சி, மீண்டும் காகமும், குயிலும் சத்தமிட்டது. அம்மரத்தை மீண்டும் பார்க்கிறான். பார்த்ததும் ஆச்சிரியப்படுகின்றான். இரண்டுக்கும் இடையில் இருக்கின்றாயே யாருக்கு இறையாகப்போரயோ ?

வேடன் குயிலைப் பார்க்கின்றான், குயிலும் வேடனைப் பார்க்கின்றது. காகம் குயிலை பார்க்க, குயில் பாம்பைப் பார்க்கின்றது , குயில் காகத்தை பார்க்க, காகம் வேடனைப் பார்க்கின்றது. இப்படி பார்க்க எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டது பாம்பு. வேடனைப் பார்த்து குயில் கூறியது. நீ கெட்டு என்ன பார்க்க, நான் கெட்டு காகத்தைப் பார்க்க, அதுவும் கெட்டு உன்ன பார்க்க – இப்படி எல்லாத்தையும் கெடுத்து நீயும் கெட்டு போரயே! இது உனக்கே ஞாயமா?


பாம்பு  - வேடனைப் பார்த்து சொன்னது. முதலில் நீ நினைத்து வந்த காரியம்  உறுதியாக இருக்கவேண்டும். உன் மீது நம்பிக்கை வை அப்பதான் வாழ்க்கையில உறுப்படியாவருவ. என்ன நம்பிக்கை – உம் – இதுவே தெரியல நீ எல்லாம் எங்க உறுப்பட போர “தன்னம்பிக்கை”